
திருவண்ணாமலையில் பலத்த மழை : குளிர்ந்த வானிலையால் மக்கள் மகிழ்ச்சி !
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் திருவண்ணாமலைக்குத் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். மழைக்கு நடுவே குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் பக்தர்கள் கோயிலை நோக்கிச் செல்லும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.