MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எடப்பாடிக்கு எதிராக வேலுமணி.. ஆடிப்போன அதிமுக தொண்டர்கள்.. அரசியலில் பரபரப்பு

எடப்பாடிக்கு எதிராக வேலுமணி.. ஆடிப்போன அதிமுக தொண்டர்கள்.. அரசியலில் பரபரப்பு

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 22 2026, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எடப்பாடி கருத்துக்கு வேலுமணி பதிலடி
Image Credit : Instagram

எடப்பாடி கருத்துக்கு வேலுமணி பதிலடி

அதிமுகவில் கட்சி ஒற்றுமை தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அருகருகே அமர்ந்து பேசினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அரசியல் விவாதம் எழுந்தது. இதுகுறித்து நவம்பர் 21ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இரண்டு கோடி உறுப்பினர்களில் வேலுமணியும் ஒருவர் என்றும், அவரைப் பற்றி தனியாகக் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொண்டர்களின் குரலைக் கேளுங்கள்!
Image Credit : Asianet News

தொண்டர்களின் குரலைக் கேளுங்கள்!

எடப்பாடியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்து வேலுமணி தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். தன்னை அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்த அவர், கட்சியின் தொண்டன் என்பதுதான் தனது முதல் அடையாளம் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தத் தொண்டர்களால்தான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படைத் தொண்டர்களின் குரலைக் கேட்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்றும், தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால் கட்சியில் எதுவும் நடக்கலாம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

35
சசிகலா முதல் செங்கோட்டையன் வரை
Image Credit : Asianet News

சசிகலா முதல் செங்கோட்டையன் வரை

அதிமுகவை நேசிக்கும் அனைவரும் பிரிவினையின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என வேலுமணி தெரிவித்துள்ளார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கங்களைத் தொடங்குவதற்கு முன்பு அதிமுகவில் இணைந்து பணியாற்ற முயன்றதாகவும், ஓ.பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம் ஆகியோரும் கட்சியில் தொடர முயற்சி எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தற்போது தவெகவில் அமைச்சராக உள்ள கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரும் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க முயன்றதாகக் கூறியுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வேறு கட்சிக்குச் சென்றதாக வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

45
உதாசீனப்படுத்தியதால்தான் இந்த நிலைமை!
Image Credit : Asianet News

உதாசீனப்படுத்தியதால்தான் இந்த நிலைமை!

தங்களுக்கு அடையாளம் கொடுத்த அதிமுகவை விட்டுச் செல்ல விரும்பாமல் வந்தவர்களைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி அனுப்பியதால்தான் தற்போது கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வேலுமணி விமர்சித்துள்ளார். கட்சியின் அடிப்படைத் தொண்டர்களை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மதித்து நடத்திய விதத்தையும் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார். கடைக்கோடி தொண்டனின் அழைப்புக்குக்கூட தலைவர்கள் முக்கியத்துவம் அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், பதவியில் இருப்பவர்களைவிட இயக்கத்தை உயிராக நேசிக்கும் தொண்டர்களின் பங்களிப்பே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் மீண்டும் அனைவரையும் இணைக்கும் முயற்சிக்கு தலைமை செவிசாய்க்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

55
அதிமுகவில் ஒற்றுமை ஏற்படுமா?
Image Credit : Asianet News

அதிமுகவில் ஒற்றுமை ஏற்படுமா?

தனது பதிவின் இறுதியில், இரண்டு கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒருமுறையாவது எடப்பாடி பழனிசாமி கவனித்துக் கேட்க வேண்டும் என வேலுமணி வலியுறுத்தியுள்ளார். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்ற பாடல் வரிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அதிமுகவில் கட்சி ஒற்றுமை, தலைமை முடிவுகள் மற்றும் வெளியேறியவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், வேலுமணியின் வெளிப்படையான விமர்சனம் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் அடுத்தகட்டமாக என்ன பதில் அளிக்கப்படும் என்பதே தற்போதைய அரசியல் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
எஸ். பி. வேலுமணி
அரசியல்
தமிழ்நாடு
 
31st T20 • WBBLT20
Live
BH-WBH-W
-
AS-WAS-W
(11.0 ov)79/2
BH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(44.3 ov) 368 & 118/2
INDIND
(166.0 ov)720/9
Day 4 - Session 3
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விதிமீறல் சர்ச்சை முதல் பார்க்கிங் பிரச்னை வரை... சென்னை இ.சி.ஆர் தனியார் மதுபான விடுதி மீது எழும் புகார்கள்!
Recommended image2
3 இலவச கேஸ் சிலிண்டர்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
Recommended image3
காய்கறி வாங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி! அதிரடி விலை உயர்வு.. எந்த காய்கறி எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
Now Playing
திருச்சி துறையூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு!
Recommended image2
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved