திருச்சி துறையூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு!

Share this Video

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரில், மனுதாரர் மற்றும் சமூக ஆர்வலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளுங்கட்சியான தாவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு பாதுகாத்து வருவதாகக் குற்றம் சாட்டி நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகக் கூறி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Video