கும்கி கொம்பன் ஸ்டைலில் ரீ எண்ட்ரி கொடுத்த சுருளி கொம்பன்; வனத்துறையினர் அலர்ட்

ஆழியாறு நோக்கி மீண்டும் சுருளி கொம்பன் யானை வரத்தொடங்கி உள்ளதால் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First Published Dec 21, 2023, 7:08 PM IST | Last Updated Dec 21, 2023, 7:08 PM IST

ஆறு மாதத்தத்திற்கு ஒரு முறை கேரளா பெரியார் புலிகள் காப்பகம் நெல்லியாம் பகுதியில் இருந்து சேத்துமடை வழியாக காட்டூர் கணல் வழியாக தண்ணீர் பள்ளம், உப்பாரு, ஆழியார், நவமலை பகுதிக்கு வருவதை சுருளி கொபன் யானை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவமலை மின்சார ஊழியர் ஓட்டி வந்த காரை தந்தத்தால் தூக்கி வீசியது. இதில் அதிர்ஷ்டவசமாக மின்சார ஊழியர் உயிர்தப்பினார்.

மேலும் நவமலை சென்ற அரசு பேருந்தை துரத்தி கண்ணாடியை உடைத்தது. சின்னார் பகுதியில் மலைவாழ் மக்கள் வீட்டையும் சேதப்படுத்தியது. பின் வால்பாறை சாலையில் வந்த மூன்று கார்களை தாக்கியது. 

இந்நிலையில் சுள்ளிக்கொம்பன், தற்போது நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆழியாரை நோக்கி நரிகல்பதி வழியாக வருவதால் வனத்துறை, உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மூன்று கார்கள் தாக்கிய வழக்கில் ஆழியார் காவல் நிலையத்தில் சுள்ளிக் கொம்பன் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.