Watch : AC மிஷினில் இருந்து வெளியேறிய திடீர் புகை! ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு!

கோவையில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற கே.ஜி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து காஸ் கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
 

First Published Apr 5, 2023, 1:16 PM IST | Last Updated Apr 5, 2023, 1:16 PM IST

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

தமிழக ஆளுநர் ரவி மேடைக்கு வந்தவுடன், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது ஏ.சி மிஷனில் இருந்து திடீரென சப்தத்துடன் gas வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

உடனடியாக, மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வேறு பகுதிக்கு நகர்ந்தனர். ஏ.சி மிஷன்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
 

Video Top Stories