பொள்ளாச்சி அழுக்கு சாமி சித்தர் கோவிலில் புதுவை முதல்வர் சிறப்பு தரிசனம்

பொள்ளாச்சி அடுத்த வேட்டைகாரன் புதூர் அழுக்கு சாமி சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.

First Published Nov 29, 2023, 7:07 PM IST | Last Updated Nov 29, 2023, 7:07 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்கு சித்தர் கோவில் மிகவும் பிரபலமானது. தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வருடம் தோறும் இக்கோவிலில் குரு பூஜை நடைபெற்று வருகிறது. 104வது குருபூஜை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு தீபாராதனை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவனடியார்களுக்கும், பொதுமக்களுக்கும் போர்வை மற்றும் வஸ்திரத்தை வழங்கினார். 

Video Top Stories