Watch : மூட நம்பிக்கையை எதிர்க்கும் ''அயலி'' திரைப்படம்! தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் பாராட்டு!!

சூலூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில், சமீபத்தில் ஓடிடி இணைதளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ''அயலி'' திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 

Share this Video

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், தந்தை பெரியார் திராவிட கழக மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சமீபத்தில் வெளியான வெப் தொடர்பான அயலி திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் கண்ணம்பாளையம் சூலூர் பேரூராட்சிகளில் முதல் பெண் தலைவர்கள் ஆகியோர் பாரட்டப்பட்டனர்.

இதில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அயலி திரைப்படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் பேரூராட்சி தலைவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் பேசிய ராமகிருஷ்ணன் பெரியாரின் தத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அயலி திரைப்படம் வெளிவந்துள்ளது. திரைப்படம் அனைத்து பெரியார் கருத்துக்களையும் உள்ளடக்கி பெண்ணியத்தை போற்றும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Related Video