கேரளா குண்டு வெடிப்பு: தமிழக - கேரளா எல்லையில் மோப்ப நாய் உதவியுடன் வாகன சோதனை.!!

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

First Published Oct 29, 2023, 8:40 PM IST | Last Updated Oct 29, 2023, 8:40 PM IST

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம், கேரள எல்லைகளில் உள்ள  13 சோதனை சாவடிகளில் எஸ்.பி பத்ரிநாரயணன் மேற்பார்வையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு  பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கோவையில் உள்ள  முக்கிய தேவலாயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100க்கு மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக தமிழக - கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி பத்ரிநாரயணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் உள்ள தமிழக - கேரளா எல்லை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன்  தீவிர வாகன  தணிக்கை  நடைபெற்று வருவதாகவும் ,அதுமட்டுமல்லாது பதட்டமான மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாகவும்” என்று கூறினார்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Video Top Stories