Asianet News TamilAsianet News Tamil

கோவையில் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப்; அதிர்ச்சியில் அலறிய பெண் வாடிக்கையாளர்

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப் புகையிலை இருந்ததை அறியாமல் உணவை சாப்பிட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதி. 

First Published Nov 16, 2023, 6:42 PM IST | Last Updated Nov 16, 2023, 6:42 PM IST

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற பெண் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் பிற்பகல் உணவு ஸ்விக்கி காம்போ ஆஃபர் மூலம் ஆர்டர் செய்து உள்ளார். இந்நிலையில் அவருக்கு வந்த உணவை அவரும், அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கி உள்ளனர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று இருந்து உள்ளது. 

இதைப் பார்த்து அதிர்ச்சி வாடிக்கையாளர் அதனை எடுத்துப் பார்த்துள்ளார். அதை கூல் லீப் புகையிலை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்நிலையில் அந்த உணவை உண்டு குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு. அந்தக் குழந்தையை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காம்போ ஆஃபரில் ஸ்விக்கி நிறுவனத்தின் மீது உரிய விசாரணை நடத்தி உணவில் எவ்வாறு இது போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது என்பது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு ஆர்டர் செய்யும் பெற்றோர்கள் உணவு பொருட்கள் வந்தவுடன் அதனை ஆய்வு செய்த பின்பு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாதிக்கப்பட்ட தாய் குற்றம் சாட்டி உள்ளார்.

Video Top Stories