வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம் காரணம்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்!

வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்தான் காரணம் என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Share this Video

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இன்று ஊட்டி ஹோபர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், நிருபர்களிடம் அவர் பேசுகையில், “நீலகிரி லோக்சபா தொகுதியில் சில ஓட்டு சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. வாக்காளர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.” என குற்றம் சாட்டினார்.

அதேசமயம், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தோல்வி பயத்தால் இது போன்ற செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நியாயமாக நடக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம் ஆனால், நியாயமாக நடக்கவில்லை.” எனவும் குற்றம் சாட்டினார்.

Related Video