Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோவை மேற்கு தொடர்ச்சி சிறுவாணி மலை அடிவாரப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
மேலும், கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.