சிவராத்திரையை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேரி வருகின்றனர்

சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Video

சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரிக்கு மலையேற தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதனிடையே சிவராத்திரிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் மலையேறி வருகின்றனர். இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் மலையேறியுள்ளனர். இந்த ஆண்டு 3 லட்சம் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video