Video : கோவை பாஜக தலைவர் கைது எதிரொலி! - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். உருவ பொம்மை மற்றும் திமுக போஸ்டர்கள் எரித்து பீளமேடு காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

First Published Sep 21, 2022, 2:07 PM IST | Last Updated Sep 21, 2022, 2:07 PM IST

கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கும் , தி.மு.க.,வினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்த பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சார்பாக பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம் ராமசாமி ஆ.ராசா மீது கடும் விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் , தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதோடு, பயங்கர மிரட்டல் கொடுத்த பாஜக மாவட்டத்தலைவர் உத்தம் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை பீளமேடு காவல் துறையினர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

இதனிடையே பாஜக திமுக போஸ்டர்கள் எரித்து பீளமேடு காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Video Top Stories