கோவையில் பிரமிப்பை ஏற்படுத்திய பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி!!

கோவையில் பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், சுமார் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றன. 
 

First Published Jan 5, 2023, 3:55 PM IST | Last Updated Jan 5, 2023, 3:55 PM IST

கோவையின் சிறப்புக்களை கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில் கோவை , பல்லடம் , திருப்பூர் , அன்னூர் , பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தினர். கண்காட்சியில்  சுமார் 100 பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள்  இடம் பெற்றன.  

சுதந்திரத்துக்கு முன்பு பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலான பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. பழைய மாடல் பென்ஸ் , செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர் லேம்பர்டா, ஜெடாக் வகையிலான இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றன. 

முன்னதாக கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணி வகுத்து செல்வதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒழிங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Video Top Stories