டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல்! கேரள யூடியூபர்கள் கைது!

கோவையில் போலி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளை மிரட்டிய கேரள யூடியூபர்கள் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

First Published Feb 27, 2023, 1:10 PM IST | Last Updated Feb 27, 2023, 1:10 PM IST

கோவை கவுண்டம்பாளையத்திற்க்கு காரில் வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் மேம்பாலம் ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் சில்மிசம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த திலீப் என்பவர் சினிமா சூட்டிங்கிற்க்கு பயன்படுத்தபடும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் (ஸ்போர்ட்ஸ்) துப்பாக்கி எடுத்து திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், அய்யாசாமி ஆசியோர் சம்பவ இடத்திற்க்கு வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு கூட்டி வந்து விசாரனை நடத்தினர்.

அவர்கள் கேரளமாநிலத்தைச் சேர்ந்த திலீப், கிஷோர், சமீர் என்பதும், இவர்கள் குரும்படம் எடுப்பதும் மற்றும் யூ டியூப் சேனல் நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, விசாரனைக்கு பிறகு ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
 

Video Top Stories