Watch : கோவை அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படிருந்த 6 இருசக்கர வாகனங்கள் தீப்பிடிப்பு! - பரபரப்பு!

கோவை விளாங்குறிச்சியில் அப்பார்ட்மெண்ட் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைதனர்.
 

Share this Video

கோவை விளாங்குறிச்சியில் ஷீலா அப்பார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் 6 இரு சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்தது. அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தா அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த வாகனங்களுக்கு பரவி இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

அதிகாலை 4 மணி அளவில் நடந்த தீ விபத்து குறித்து ,தொடர்ந்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video