Watch : கோவையில் குதிரை மேல் நின்றவாறு இரட்டை சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் அசத்தல்!
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதியின் 5 வயது மகன் ரோகன்குமார் எல்.கே.ஜி படித்து வருகிறார். ரோகன்குமார் 4 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இந்நிலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடத்தில் மீண்டும் குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார்.
சாதனையை நிகழ்த்திய சிறுவனை பெற்றோர், உறவினர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறுவன் ரோகன்குமார் செய்த சாதனைக்கான கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதே போல அவர்களது மூத்த மகள் நித்தியாஶ்ரீ (13), 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் படங்கள், விழிப்புணர்வு படங்கள் என 11 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.