தொடர் விடுமுறை; பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 அம்னி பேருந்துகள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி
கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த மற்றும் சாலை வரி கட்டாத 18 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.