பரந்தூர் விமான நிலையம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது… பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் வேளாண் துறை நிதியின்றி முடங்கி உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேளாண் துறை நிதியின்றி முடங்கி உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு கடந்த 7 ஆம் தேதி பிரதமர் வருகை தந்த போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரதரை முதலமைச்சர் முக.ஸ்டாலின் சந்தித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரக்கோணம் விமானப்படை அனுமதி மறுப்பதாகவும், பரந்தூர் முதல் அரக்கோணம் வரையிலும் உள்ள மிகப்பெரும் காடுகளை அழிப்பதற்கு மத்திய அரசின் வனத்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அதனை பிரதமர் தலையிட்டு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் பிரதமரை நேரில் வலியுறுத்தியதாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை!!
இது மிகுந்த பேரதிர்ச்சி அளிக்கிறது. பருவநிலை மாற்றத்திற்கு காடுகளின் பரப்பளவு கூட்டுவதற்கும், நீர் நிலைகளை பாதுகாப்பதற்கும் உலகளாவிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கு உயர்மட்ட குழு முதலமைச்சர் தலைமையில் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுபட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயற்கையை அழித்தும், அரக்கோணம் விமானப்படை விமான நிலையத்தின் தடையின்மை சான்றுபெற்று தரவலியுறுத்தியதாகவும் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. இலங்கை கடற்பகுதி சீன விமானப்படை தளமாக மாற்றிவரும் நிலையில் தென்னிந்தியாவின் பாதுகாப்பே அரக்கோணம் விமானப்படை தளத்தை நம்பி உள்ளோம்.
இதையும் படிங்க: முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதல்! - மருந்து தெளிக்க தானியங்கி இயந்திரம் கண்டுபிடித்த விவசாயிகள்!
பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தாலும் பரவாயில்லை பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் அனுமதி அளிக்க துணைபோவதை கைவிட வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கண்ணியாகுமரி மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகள் மூலம் கனிம வளம் கேரளாவிற்கு கடத்தப்படுவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை தென்காசி மாவட்ட ஆட்சியர் நியாயப்படுத்துவது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் துறை நிதியின்றி முடங்கி உள்ளது. மத்திய மாநில அரசுகளிடம் நிர்வாக முரண்பாடு உள்ளது. உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி, சந்தைப்படுத்தும் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை கையாள்வதற்கு தமிழகத்தில் நிர்வாக அமைப்பு இன்றி முடங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.