Chennai : போக்குவரத்து போலீசை தாக்க முயன்ற 3 பெண்கள்.. சென்னையில் பரபரப்பு - வைரல் வீடியோ

சென்னையில் நடுரோட்டில் டீ கடையில் நின்று கொண்டிருந்த நபர்களை செருப்பால் அடித்து விட்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரியை  தாக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

First Published Jul 6, 2023, 12:16 AM IST | Last Updated Jul 6, 2023, 12:16 AM IST

சென்னை அடையார் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி எதிரே பேருந்து நிலையத்தில் நின்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக  சாலையில் வந்து கொண்டிருந்த  மூன்று பெண்கள்  ஒரே வாகனத்தில் பயணித்தனர். இதனை மடக்கி பிடித்து போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ராஜேஷ்  விளக்கம் கேட்டபோது உடல்நிலை சரியில்லை என கூறி அங்கிருந்து வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தை எடுத்து சென்று விட்டனர்.

அருகிலேயே டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த  மூன்று நபர்களை நோக்கி வந்த ஒரு பெண் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவர்களை  தாக்கி அவதூறாக பேசி பட்ட பகலில் நடு ரோட்டில் ஆண்கள் என்றும் பாராமல் பொதுமக்கள் இருக்கும்பொழுது செருப்பை கழட்டி அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறை அதிகாரி ராஜேஷ் உடனே ஓடி வந்து இதனை குறித்து  பிரச்சனையில் ஈடுபட்ட பெண்களை தட்டி கேட்க, அந்த இடமே போர்க்களமாக மாறியது.

உடனே அந்த காவல்துறை அதிகாரி அவர்களை புகைப்படம் எடுத்து அவர்களிடம் இருந்து ஓட்டுநர் உரிமம் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தில் இன்சூரன்ஸ் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அப் பெண்களுடன் வந்திருந்த ஆண் நண்பர் சம்பவத்தில் போது செய்தி சேகரிக்க சென்ற நபர்களை தாக்க முயன்ற வீடியோவும் உள்ளது. இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!