அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கல்வி சீர் வழங்கி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய கிராம மக்கள்

தாமரைக்குளம் கிராம அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் தின விழாவையொட்டி 6 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் கொண்டு சென்ற கிராமமக்கள்.

Share this Video

அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் கொண்டு சென்றனர்.

இதில் பீரோ, மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அமர்வதற்கான நாற்காலிகள், வட்ட மேசை, கணினி, எழுது பொருட்கள், மின் விசிறி, RO வாட்டர் கருவி, விளையாட்டு உபகரணங்கள், முதலுதவி பெட்டி ஆகியவற்றை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளியில் வழங்கினர். இதில் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Video