WATCH | ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு! - செயல்முறை விளக்க கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பு!
Spraying medicine by drone | கீழப்பழூவூரில் உள்ள கரும்பு வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் நடைபெற்றநு. இதில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யபட்டுள்ள கரும்பு பயிரில் மாவுபூச்சி மற்றும் போக்கோ போங்க் என்ற நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த நோயை கட்டுபடுத்தும் விதமாக திருமானூர் வட்டார வேளாண்மைதுறை மற்றும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை சார்பில் கீழப்பழூவூரில் உள்ள கரும்பு வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் நடைப்பெற்றது. இதனையடுத்து கரும்பு ஆராய்ச்சி நிலையத்தால் பரிந்துரைக்கபட்ட மருந்தினை ட்ரோன் மூலம் தெளிக்கபட்டது.
மேலும் 5 மாதமான கரும்பு வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதினால், மருந்து தெளிக்கும் செலவு மற்றும் மருந்துக்கான செலவு ஆகியவை 50 சதவீதத்திற்கும் மேல் மிச்சபடும் என தெரிவிக்கபட்டது. இதில் கோத்தாரி சர்க்கரை ஆலை முதுநிலை மேலாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.