Watch : மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை - தொல் திருமாவளவன்!

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 

Share this Video

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் பேசும்போது மத்திய அரசு மாணவர்களுக்கு கொடுக்கின்ற கல்வி உதவித்தொகை தற்போது குறைத்து வழங்கப்படுவது இடைநிற்றல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது எனவே கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

Related Video