Asianet News TamilAsianet News Tamil

அரியலூரில் பெற்றோரின் கால்களை கழுவி ஆசி பெற்ற பொதுத்தேர்வு மாணவர்கள்; தனியார் பள்ளியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி

அரியலூரில் தனியார் பள்ளியில் பயின்று பொதுத் தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களின் கால்களை கழுவி ஆசி பெற்ற நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First Published Feb 10, 2024, 1:14 PM IST | Last Updated Feb 10, 2024, 1:14 PM IST

வருகின்ற மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொது தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 159 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெரும் பாதபூஜை நிகழ்ச்சி பள்ளியின் சார்பில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அந்தோணி செழியன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது தாய், தந்தையரின் கால்களை கழுவி சந்தனம், குங்குமம் இட்டு பாதபூஜை செய்து காலில் விழுந்து வழிபட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி நெற்றியில் திலகம் இட்டு கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, ஆசீர்வாதம் வழங்கினர். பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. 

Video Top Stories