அரியலூர் ஜல்லிக்கட்டு போட்யில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயற்சித்த காளையர்கள்

அரியலூர் மாவட்டம் தூய மங்கல அன்னை ஆலய பெருவிழாவையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 200 க்கும் மேற்பட்ட காளையர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First Published May 20, 2023, 3:31 PM IST | Last Updated May 20, 2023, 3:31 PM IST

அரியலூர் மாவட்டம் தூய மங்கல அன்னை ஆலய பெருவிழாவையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 200 க்கும் மேற்பட்ட காளையர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகளும் 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.