VIDEO : அன்று சிறு செடியாக நட்டு வைத்தேன்! இன்று பெரு மரமாய்...! கட்டித் தழுவி மகிழ்ந்த அன்புமணி!

தான் நட்டு வைத்த செடி ஒன்று இன்று மரமாக வளர்ந்து நிற்பதைக் கண்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி கொண்டார்.
 

Dinesh TG  | Published: Jun 10, 2023, 11:57 AM IST

21 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகம் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அரியலூர் மாவட்டம் செந்துறை இலை கடம்பூரில் ஒரு ஆலமரச் செடியை நட்டு வைத்தார். அது, இன்று பெரிய விருச்சகமாய் வளர்ந்து அனைவருக்கும் நிழல் தந்து வருகிறது. மரத்தை பார்வையிட்ட அன்புமணி, அதனை கட்டித் தழுவி மகிழ்ந்தார்.

மேலும் மரம் நடுவது சிறந்த அறம் என்றும், பொதுமக்கள் மரங்களை நட்டு இயற்கையை காக்கவும், அதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அன்புமணி அன்பு கோரிக்கை விடுத்தார்.
 

 

 

Read More...

Video Top Stories