பிலிபைன்ஸ் பெண்ணை பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட அரியலூர் இளைஞர்

பிலிபைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட அரியலூர் இளைஞரை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வாழ்த்தினார்.

First Published Jan 8, 2023, 4:31 PM IST | Last Updated Jan 8, 2023, 4:31 PM IST

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பொறியியல் படித்து விட்டு சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் வெல்ஜோலின். இவர் அக்ரி கல்சர்‌ படித்து நெதர்லாந்து நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நட்பு உண்டாகி பின்னர் காதலாக மாறியுள்ளது.

தற்போது இருவரும் சுயமரியாதை திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஆண்டிமடம் கவரப்பாளையம் அண்ணா பெரியார் கலை அரங்கத்தில் திராவிட கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் இணை ஏற்பு விழா நடைபெற்றது. 

இதில்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட‌ போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மணமக்களை வாழ்த்தினார்.

Video Top Stories