அரியலூரில் அரசுப் பேருந்து மரத்தில் மோதி கோர விபத்து; குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்

தஞ்சையில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதியதில் குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

Share this Video

தஞ்சையில் இருந்து, திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்து அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் பகுதியில் வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் இடதுபுறமாக இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video