Asianet News TamilAsianet News Tamil

IPL 2023 : CSK Vs MI இடையேயான போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை! ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் விரக்தி!

வரும் 6ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுவென நடைபெற்று வருகிது.
 

First Published May 3, 2023, 2:11 PM IST | Last Updated May 3, 2023, 2:11 PM IST

IPL 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதி சீசன் முடிவடைந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியிலில் முதலிடத்தை வகிக்கிறது. வரும் 6ம் தேதி சென்னை மும்பை இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் நள்ளிரவு முதலே டிக்கெட் வாங்க காத்திருந்தனர். விடிய விடிய காத்திருந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். டிக்கெட்டுகள் முறையாக விற்கப்படாமல், கள்ள சந்தையில் விற்பதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

 

Video Top Stories