நன்றி சொல்றது ஈஸி, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!

எனக்கு எளிதானது என்னவென்றால், நன்றி சொல்வது தான், ஆனால், கஷ்டமானது என்னவென்று கேட்டால் அது அடுத்த சீசனுக்காக நான் 9 மாதம் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். 

First Published Jun 2, 2023, 1:50 PM IST | Last Updated Jun 2, 2023, 1:50 PM IST

கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று மே 30 ஆம் தேதி அதிகாலையுடன் முடிவடைந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் 5 முறை சாம்பியன் பட்டத்தை சமன் செய்துள்ளது. போட்டி முடிந்த பின்னர் ஐபிஎல் டிராபி வாங்கும் போது பேசிய தோனி, எனக்கு எளிதானது என்னவென்றால், நன்றி சொல்வது தான், ஆனால், கஷ்டமானது என்னவென்று கேட்டால் அது அடுத்த சீசனுக்காக நான் 9 மாதம் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். 

Video Top Stories