உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா டிராபியை கைப்பற்ற மதுரையில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு!

இந்தியாவில் நடந்து வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி சந்திப்பில் உள்ள ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Share this Video

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்ப‌ற்ற வேண்டி மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து வடக்கு மாசி மேல‌மாசி ‌வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டது.

Related Video