சிறப்பு பூஜையில் விளக்குகளை ஏந்தியபடி நடனமாடி வந்து வழிபட்ட இளம் பெண்கள்

கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு தீப உற்சவ நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள், கைகளில் விளக்குகளை ஏத்தியபடி நடனமாடி வழிபட்டனர்.

Share this Video

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாரதாம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இந்த கோவில் நேற்று ஆயிரகணக்கான விளக்குகளால் அலங்கரிக்கபட்டு தீப உற்சவ நிகழ்வு கோவிலில் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விளக்குகளை கையில் ஏந்தியபடி நடனமாடி கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு சாரதாம்மாள் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தபட்டது.

Related Video