Makara Jyothi: சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.. ஐயப்ப பக்தர்கள் பரவசம்

இன்று சபரிமலை கோவிலில் மகர ஜோதி ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக காட்சி அளித்தார் ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர்.

First Published Jan 14, 2023, 8:42 PM IST | Last Updated Jan 14, 2023, 8:51 PM IST

ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதியன்று சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடத்தப்படும். அதாவது கேரள மக்களின் வழக்கப்படி இந்த தேதியில்தான் மகர சங்கராந்தி மாதம் தொடங்குகிறது. எனவே மாதத்தின் முதல் நாளில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்பது ஐதீகம். சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

இதனை தந்திரி கண்டரரூ ராஜீவர் திறந்துவைத்து மகா தீபாராதனை காட்டினார். இதை தொடர்ந்து 31.12. 2022 அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 8 மணி முதல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 11:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி மற்றும் மகர நட்சத்திரம் தோன்றும் இந்த நிகழ்வை  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர். மகர ஜோதி என்பது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மூன்று முறை காட்சி தருவதை குறிப்பாகும்.  இதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜையை ஒட்டி, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதையும் படிங்க..Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?

Video Top Stories