கோவை ஐயப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு

விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்து வருகின்றனர்.

Share this Video

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் நடைபெறும். இந்நிகழ்வில் ஐயப்பனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம். அதன் படி பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் இந்த எழுத்தறிவுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஐயப்பனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைக்கின்றனர். 

விஜயதசமியை முன்னிட்டு அக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Video