Asianet News TamilAsianet News Tamil

பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு - பக்தர்கள் பரவசம்

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த வேலாண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் பூஜையின் போது நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

First Published Mar 11, 2023, 12:04 PM IST | Last Updated Mar 11, 2023, 12:04 PM IST

கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த ஒரு நாகம் அம்மன் காலடியில் படமெடுத்து நின்றுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவர்களது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Video Top Stories