Asianet News TamilAsianet News Tamil

ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு

ஓசூரில் ஆதியோகி சிவன் ரதத்திற்கு பக்தர்கள் பூஜை செய்து தேவாரம் பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

First Published Feb 20, 2024, 11:37 AM IST | Last Updated Feb 20, 2024, 11:37 AM IST

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மகா சிவராத்திரி ஈசனுடன் ஒரு இரவு என்ற நிகழ்வு நடைபெற உள்ளது.  இதற்காக ஈஷா மையம் சார்பில் ஆகியோகி சிவன் ரதம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பவனி வருகிறது. அந்த வகையில் ஓசூர் பகுதிக்கு வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பொதுமக்கள் மற்றும் சிவன் பக்தர்கள், ஈஷா மையத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது பக்தர்கள் ஆதியோகி சிவனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து தேவாரம் பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு தேவாரம் பாடல்களை மெய் மறந்து பாடினர். மேலும் மக்கள் நலம் பெற மகா சிவராத்திரியை அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கேட்டு கொண்டனர். இந்த நிகழ்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Video Top Stories