Asianet News TamilAsianet News Tamil

கோவையில் ரத்தம் சொட்ட சொட்ட அம்மனை அழைத்த பக்தர்கள்

கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

கோவை டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவிலை வந்து அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

Video Top Stories