உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில்: கோலாகலமாக நடந்த மாங்கனி திருவிழா

காரைக்காலில் உலகப் புகழ்பெற்ற பரமத்தத்த புனித வதியார் என்று அழைக்கக்கூடிய காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது.

First Published Jul 2, 2023, 5:15 PM IST | Last Updated Jul 2, 2023, 5:15 PM IST

உலக பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை பிச்சாண்டவர் மூர்த்தியாக சிவபெருமான் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கல வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து  பிச்சாண்ட மூர்த்தி பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா புறப்பட்டார். சிவனடியார்கள் வேதபராயனம் ஓதி, சிவ வாத்தியங்கள் முழங்க, பூதகணங்களும் மங்கள வாத்தியங்களும் முன் செல்ல சுவாமி ஊர்வலம் புறப்பட்டது.  

அப்போது லட்சக்கணக்கான பொதுமக்கள் சாமி ஊர்வலம் வரும் வீதிகளில்  மலர்களாலும் மாம்பழங்களும், வெட்டிவேர்  மாலைகளாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.  பின்னர் சுவாமி ஊர்வலத்திற்கு பின்புறம் மாம்பழங்கள் இறைக்கப்பட்டன.  மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடித்த வண்ணம் இருந்தனர். சுவாமி புறப்பாடு முக்கிய வீதிகள் வழியாக வந்து இன்று இரவு காரைக்கால் அம்மையார் கோவிலில் வந்தடையும். பிச்சாண்டவ மூர்த்திக்கு  காரைக்கால் அம்மையார் அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை ஒட்டி  காரைக்கால் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 

லியோ சர்ச்சைக்கு மத்தியில்.. மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கடிதம் எழுதிய நடிகர் விஜய்.. அடேங்கப்பா.!

Video Top Stories