நடிகர் பிரபு, ரெஜினாவை காண முண்டியடித்த ரசிகர்கள்; திறப்பு விழாவுக்கு முன்பே உடைந்து நொறுங்கிய கதவுகள்

நடிகர் பிரபு, நடிகை ரெஜினா கலந்து கொண்ட நகைக்கடை திறப்பு விழாவில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

First Published Aug 3, 2023, 4:39 PM IST | Last Updated Aug 3, 2023, 4:39 PM IST

புதுச்சேரியில் புதுபிக்கப்பட்ட பிரபல தனியார் நகைக்கடையின் விளம்பர தூதரான  நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இன்று புதுப்பிக்கப்பட்ட கடையினை திறந்து வைத்தனர். இதற்காக காரில் வந்த நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினா கடையின் முன் பக்கமாக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது ஏறி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து கையசைத்தனர்.

தொடர்ந்து கடைக்கு உள்ளே சென்ற நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினாவை காண்பதற்காக ஏராளமான கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள், பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டி அடித்துச் செல்லவே கடையின் முன்பக்கத்தில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் உடனடியாக கண்ணாடி துண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு குத்துவிளக்கேற்றி கடை திறக்கப்பட்டது.

Video Top Stories