Watch : புதுவையில் போட்டியாக கடைவைத்தர்வகளை மிரட்டிய பலூன் வியாபாரி!

புதுச்சேரி கடற்கரை சாலையில், தன் கடைக்கு போட்டியாக கடைவைத்த நரிக்குறவர்களை, கத்தி முனையில் மிரட்டி ரகளையில் ஈடுபட்ட பலூன் வியாபாரியை போலீசர் தேடி வருகின்றனர்.
 

Share this Video

புதுச்சேரி கடற்கரை சாலையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கத்தி முனையில், மற்றவர்களை மிரட்டி ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீசர் நடத்திய விசாரணையில், அவர் கடற்கரை காந்தி திடல் அருகே நடைபாதையில் பலூன் விற்பனை செய்யும் தர்மா என்பது தெரியவந்துள்ளது.

அண்மையில், அவரது கடைக்கு அருகே சில நரிக்குறவர்கள் கடை வைத்ததால், அவர்களை விரட்டும் நோக்கில் போதையில் தர்மா ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வீடியோ வெளியாகி அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். தர்மா மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video