வாகனங்கள் நிறுத்துவதில் தகராறு; பாட்டில்களை பந்தாடிய ஊழியர்கள் - ஸ்வீட் ஸ்டாலில் காரசாரம்

புதுவையில் கடை முன்பு வாகனங்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர்கள் மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டாலுக்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது கடை வாசலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இப்படி இருந்தால், கடைக்குள் எப்படி வர முடியும் என்று ஊழியர்களிடம் அந்த கும்பல் கேட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியது. இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடை ஊழியர்களை தாக்கும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video