புதுவையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவுநாள்! முதல்வர் ரங்கசாமி மரியதை!

புதுச்சேரியில் சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

First Published Feb 11, 2023, 1:11 PM IST | Last Updated Feb 11, 2023, 1:11 PM IST

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதேபோல் பல்வேறு மீனவ அமைப்புகளும் சிங்கார வேலரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Video Top Stories