புதுவையில் சிவராத்திரி சிறப்பு பூஜை! சிவபெருமான் கையெழுத்திட்ட ஓலைச்சுவடியை தரிசிக்க அலைமோதிய கூட்டம்!
புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள அம்பலத்தடையார் மடத்தில் இந்த தெய்வீக ஓலைச்சுவடிகள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெள்ளி பெட்டியில் பாதுகாக்கப்பட்டு சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் பூஜை செய்யப்படுகிறது.
3,500 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூற, சிவபெருமான் எழுதிய திருவாசக ஓலைச்சுவடி, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பெட்டியை திறந்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த செய்தி சற்று வியப்பாக இருந்தாலும் பல ஆண்டுகளாக புதுச்சேரி அம்பலத்தாடையார் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நிதர்சனமான உண்மையே..
புதுச்சேரிக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியான புதுச்சேரியில் மகா சிவராத்திரி அன்று ஓலைச்சுவடியை பார்த்து வணங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவற்றை வணங்கி செல்வது இன்றளவும் வழக்கமாக உள்ளது.
மேலும் இந்த ஓலைச்சுவடியை பக்தர்கள் தொட்டுப் பார்க்கவோ அல்லது அதன் அருகில் என்று வழிபடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை பக்தர்களுக்கு எட்டாத தூரத்தில் மட்டுமே ஓலைச்சுவடி வைக்கப்பட்டு இருக்கும் இது ஒரு புறம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தினாலும்...
சிவபெருமான் கையெழுத்திட்ட ஓலைச்சுவடியை கண்டால் சிவனையே நேரில் பார்த்த மாதிரி என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.