மடிக்கணினி வழங்கும் விழாவில் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுத எம்எல்ஏ

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.

Share this Video

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 

அப்போது அவர் பேசுகையில், இதே பள்ளியில் சென்ற முறை முதலமைச்சர் மடிக்கணினி வழங்கும்போது மேடையில் நிற்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. அதே இடத்தில் என் கையால் மாணவர்களுக்கு இப்போது வழங்குவது பெருமையாக உள்ளது. அதேபோல் நீங்களும் படித்து வாழ்வில் படிப்படியாக பெரிய ஆளாக வேண்டும் என்று கூறும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.

Related Video