பாகுபலி அனுஷ்கா பாணியில் வாளின் கூர்மையை பரிசோதித்த பெண் அமைச்சரின் வீடியோ வைரல்

பாகுபலி அனுஷ்கா போன்று போர் வாளின் கூர்மையை பரிசோதித்த புதுச்சேரி பெண் அமைச்சரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Share this Video

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சரான சந்திரப்பிரியங்கா இவர் காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். இவர் அம்மன் வேடமிட்டது, திருமண நிகழ்வில் டான்ஸ் ஆடியது, குதிரை வண்டி ஓட்டியது என பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், தற்போது புதுச்சேரி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் கையில் இருந்த போர்வாளை அதன் உறையில் இருந்து எடுத்து அதன் கூர்மையை பரிசோதிக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அவர்களது தொண்டர்களிடம் கேட்டபோது தொண்டர்கள் பரிசளித்த போர்வாள் என்றும் தெரிவித்தனர்.

Related Video