புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தாண்டியா நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  குஜராத்  மற்றும் மகாராஷ்டிரா தின  விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

First Published May 1, 2023, 3:39 PM IST | Last Updated May 1, 2023, 3:39 PM IST

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  குஜராத்  மற்றும் மகாராஷ்டிரா தின  விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ரங்க்லீலா கலை குழுவினர் தாண்டியா நடனமாடினார்கள். இதில் கலந்து கொண்ட பெண்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் நடனமாடினார்கள்.

குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி அப்பெண்கள்  கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசையும்  நடனமாடினார்.
 

Video Top Stories