என்னங்க வைத்தியம் பாக்குறீங்க? ஜிப்மரில் மருத்துவர்களை லெப்ட் ரைட் வாங்கிய அதிமுக செயலாளர்

புதுவையில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக செயலாளர் அன்பழகன் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களை கண்டித்தார்.

Share this Video

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு சோலாரா என்ற தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து அதிமுக மாநில தலைவர் அன்பழகன் நலம் விசாரித்தார்.

அப்பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது ஜிப்மர் மருத்துவர்களை வரவழைத்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவி செய்கிறீர்கள் என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறீர்கள் என்று மருத்துவர்களை நிக்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கும் வீடியோ தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது.

Related Video