சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு புன்னகையுடன் நகர்ந்து சென்ற குடியரசு தலைவர்

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அபிஷேகப்பாக்கம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கி அவர்களுக்கு சாக்லேட்களை கொடுத்து விட்டு புன்னகையுடன் சென்றார்.

Share this Video

நாட்டின் குடியரசுத்தலைவராக திரெளவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக புதுச்சேரிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்த குடியரசுத் தலைவரை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் வழிபட்டுவிட்டு, முருகம்பாக்கம் பகுதியில் உள்ள கைவினை கிராமத்தில் உள்ள கலை பொருட்களை பாரவையிட்டுவிட்டு சாலை வழியாக திருக்காஞ்சி கோவிலுக்கு சென்றார். 

அப்போது அபிஷேகபாக்கம் பகுதியில் தங்களது பெற்றோருடன் குழந்தைகள் நின்றுகொண்டிருந்ததை கண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ , காரில் இருந்து இறங்கி வந்து குழந்தைகளுக்கு டைரி மில்க் சாக்லேட்டுகளை வழங்கி விட்டு மீண்டும் புன்சிரிப்புடன் காரில் ஏறி கோவிலுக்கு சென்றார்.

Related Video