"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!

Pondy Lit Fest 2024 : அரசுகள், விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை பெரிய அளவில் வீணடிப்பதாக கடும் விவாதம் நடந்தது.

First Published Sep 20, 2024, 11:46 PM IST | Last Updated Sep 20, 2024, 11:46 PM IST

கடந்த ஏழு ஆண்டுகளாக புதுச்சேரியில் Pondy Lit Fest என்ற நிகழ்ச்சியை நடந்து வருகிறது. இன்று செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சி, வருகின்ற செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வரை, அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் நேரில் பங்கேற்று பல விதமான தலைப்புகளில் தங்கள் உரையை ஆற்றி வருகின்றனர். 

இன்று பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல முக்கிய விஷயங்களை விவாதித்த நிலையில், "அரசுகள் எப்படி மக்கள் பணத்தை விளம்பரத்திற்காக மட்டுமே பெரிய அளவில் வீணடிக்கின்றன" என்பது குறித்து காரசாரமான விவாதம் அறிஞர் பெருமக்களிடையே நடைபெற்றது. தொடர்ச்சியாக இந்த விழா இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் யார் வேண்டுமானாலும் இலவசமாக பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories