புதுவையில் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை; படுக்கை இல்லாததால் தரையில் படுக்க வைக்கப்படும் நோயாளிகள்

புதுவையில் விடுமுறை நாட்களில் ஏற்படும் விபத்துகளால் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

விடுமுறை நாட்களில் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வெகுவாக குவிந்து இருப்பதை பார்க்க முடியும். அதே நாட்களில் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுகிறது.

நேற்று மாலை நோயாளிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் கூடுதலாக வருபவர்கள் வரண்டா மற்றும் நடைபாதையில் தங்க வைக்கப்டுகிறார்கள். இவர்கள் சிகிச்சை முடிந்து காலையில் சென்று விட்டனர்.

Related Video